பாரதிய பொது தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வரும் தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து சேலம் பாரதிய பொது தொழிலாளர்கள் சங்க தலைமை மின்னணு பிரிவு சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தலைமை தொழிற்சாலையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொழிலாளர் நல சலுகைகள் வழங்க வேண்டும். சுழற்சி முறையில் பணி செய்து வந்த தொழிலாளர்கள் நிர்வாகத்தின் ஷிப்ட் முறை இரண்டையும் ஒரே சிப்டாக மாற்றி பணியாளர்களிடம் உழைப்பு சுரண்டலில் ஈடுபட்டு வருவதாகவும், இரண்டு வேளை சிப்ட் முறையில் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெங்கடாஜலபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் மாவட்ட செயல் தலைவர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
