பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பாஜக குறித்து அவதூறாகப் பேசியதாக, பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹுவா மொய்த்ராவைக் கண்டித்து, பாஜகவினர் ஆரணியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் சி.ஏழுமலை தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில துணைத் தலைவர் கள் ஏ.ஜி.சம்பத், கோ.வெங்கடே சன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். வடக்கு மாவட்ட பார்வையாளர் ஜீவானந்தம், பி.எம்.எஸ்.ராஜேந்திரன், முன்னாள் மாவட்டத்தலைவர் சா.வெங்கடேசன், ஆரணி மக்களவைத் தொகுதி இணை பொறுப்பாளர் பி.விநாயகம், வடக்கு மண்டலத் தலைவர் குணாநிதி, முன்னாள் மண்டலத் தலைவர் சேட்டு ஜி, மாவட்டச் செயலர் சதீஷ், மாவட்ட துணைத் தலைவர் தீனன், நகரத் தலைவர் ஜெகதீசன், இளைஞரணி நிர்வாகி புவனேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story