இஸ்ரோ விஞ்ஞானியை மாற்ற கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்

இஸ்ரோ விஞ்ஞானியை மாற்ற கோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்
 செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்
சங்கரன்கோவில் அருகே இஸ்ரோ விஞ்ஞானி சோமநாத்தை மாற்ற‌ வேண்டும் என செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிராஜா. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் இன்று திடீரென செல்போன் டவர் மீது ஏறி இஸ்ரோ விஞ்ஞானி சோம்நாத்தை மாற்ற வலியுறுத்தியும்,

இது பற்றி தான் பேசினால் பெண்கள் என்னை ஏளனமாக பேசுவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். மேலே நின்ற அவரை அவரது மகனின் உதவியோடு தீயணைப்பு துறையினர் டவர் மேலே சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கீழே இறங்கினார். கீழே இறங்கியதும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் போது அவரது மகன் அவரை தாக்குவதற்கு பாய்ந்த நிலையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மேலும் இஸ்ரோ விஞ்ஞானியை மாற்றுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் பேசி வருவதாகவும் தெரிவித்தார்....

Tags

Read MoreRead Less
Next Story