ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா்

கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனர்.


கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனர்.

கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கள்ளா் சீரமைப்புத் துறையின் கீழ் வரும் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 226 கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் கள்ளா் சீரமைப்புத் துறை இயக்குநா்அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளூவா் சிலை சந்திப்பில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் பி.வி. கதிரவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் திரண்டனா்.

இதைத்தொடா்ந்து, போலீஸாா் அங்கு தடுப்புகளை அமைத்து அவா்களைத் தடுத்து நிறுத்தினா். ஆனால், தடுப்புகளை அகற்ற முயன்றதால், போலீஸாருக்கும் அவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தின் இறுதியில் கள்ளா் சீரமைப்புத் துறை இணை இயக்குநரிடம் கோரிக்கை மனுவை அளித்து விட்டு கலைந்து சென்றனா்.

Tags

Read MoreRead Less
Next Story