அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்சூரன்ஸ் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம்

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் இன்சூரன்ஸ் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம்

அரசு ஊழியர்கள் போராட்டம் 

அரசு ஊழியர்களிடம் இருந்து பணம் பறிப்பதாக கூறி திருப்பூரில் இன்சூரன்ஸ் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் பணம் பறிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மெடி அசிஸ்ட் யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனி என குற்றம்கூறி திருப்பூரில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள யுனைடெட் இன்சூரன்ஸ் கம்பெனி வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழப்பினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் ஊழியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story