இறச்சகுளத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

இறச்சகுளத்தில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
X
வீட்டில் கறுப்பு கொடி ஏற்றிய பெண்
கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம் அருள் ஞானபுரத்தில் அம்பேத்கரின் முழு உருவச்சிலை அமைக்க அனுமதிக்க வேண்டி தமிழ்நாடு தலித் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து வீடுகளில் கருப்புகொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், இறச்சகுளம் அருள் ஞானபுரத்தில் அம்பேத்கரின் முழு உருவச்சிலை அமைக்க அனுமதிக்க வேண்டி தமிழ்நாடு தலித் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் கடந்த 22 ஆம் தேதி இறச்சகுளம் சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதை அடுத்து முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் தினகரன் மற்றும் நிர்வாகிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் இறச்சகுளம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் 70 பேரை போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அம்பேத்கரின் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story