ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் உள்ள மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வுதியர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில், தமிழக திமுக முதலமைச்சர் தி.மு.க தலைவராக பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது அரசு ஊழியர். ஆசிரியர், ஓய்வூதியர், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றித் தர வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10% வழங்கிட வேண்டும், குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.7850/- வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு ஒப்பந்தம் காப்பீடு நிறுவனத்தின் செயல்பாடுகளை முதல்வர் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தி ஓய்வூதியர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முழுவதிலுமிருந்து அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.