ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தங்களது கோரிக்கையை முன்வைத்து கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் ஆளவந்தார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் நீலமேகம், வரவேற்புரை ஆற்றினார் மாவட்ட துணை தலைவர்கள் மகேஸ்வரன், இளவரசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 70 சதவீதம் வயது முதிர்வுற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், சத்துணவு அங்கன்வாடி உள்ளிட்ட ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் பென்ஷன் 7850 ரூபாய் வழங்கிட வேண்டும், மருத்துவ காப்பீட்டை முறையாக குறைபாடுகள் இன்றி அமல்படுத்த வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்ணில் கருப்பு துணி கட்டி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் கோரிக்கை விளக்க உரை ஆற்றிய ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இணைச்செயலாளர்கள், விஜயராமு, சின்னசாமி பரமசிவம் உள்ளிட்ட பெரம்பலூர் குன்னம் ஆலத்தூர் வேப்பந்தட்டை ஆகிய வட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.

Tags

Next Story