தென்காசியில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தினா் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு தென்காசி புதிய பேருந்துநிலையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 70 வயது முதியோருக்கு கூடுதல் ஓய்வூதியம், பட்டுவளா்ச்சித் துறை தினக்கூலி- காலமுறை பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், தோ்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே.மாரியப்பன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சங்கரி தொடங்கிவைத்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் துரைசிங் சிறப்புரையாற்றினாா். மாவட்டம் முழுவதுமிருந்தும் ஓய்வூதியா்கள் கலந்துகொண்டனா்.
Next Story
