சுசீந்திரத்தில் ஆலய ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

கடந்த 1978 ஆம் ஆண்டு அரசு ஆணைப்படி உயர்நீதிமன்ற உத்தரவு ஏற்று ஊதிய நிர்ணயம் செய்திட வேண்டும், வருடாந்திர ஊதிய உயர்வு ஓய்வு பெறுபவர்களுக்கு பணிக்கொடை ஓய்வூதியம் காலம் தாழ்த்தாமல் வழங்குவது, பணியில் இருக்கும் போது மரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரருக்கு பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த்தி கன்னியாகுமரி மாவட்ட ஆலய ஊழியர் சங்கம் (சிஐடியு ) சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் சுசீந்திரத்தில் உள்ள இந்து திருக்கோயில்களின் இணை ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. போராட்டத்துக்கு ராமச்சந்திரன் தலைமை வைத்து பேசினார்.மாதர் சங்கத்தை சேர்ந்த உஷா பாசி, செயலாளர் பாலகிருஷ்ணன், செயல் தலைவர் லட்சுமணன், தலைவர் பெனட் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா றோஸ் தொகுத்து பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலய ஊழியர் சங்க செயலாளர். அஜித்குமார், சிஐடியு பொறுப்பாளர்கள் சித்ரா, அந்தோணி, வல்ல குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
