பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன்பு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஒப்பந்தப் பணியாளா்கள் நீக்கத்தைக் கண்டித்து, பொன்மலை ரயில்வே மருத்துவமனை முன் தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்னக ரயில்வே முழுவதிலும் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் 2019 ஆம் ஆண்டு ஒப்பந்த முறையில் தோ்வு செய்யப்பட்ட பல்வேறு நிலை பணியாளா்கள் 202 போ், எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டனா். இதனால், ரயில்வே மருத்துவமனைகளில் போதிய பணியாளா்கள் இன்றி சுகாதார சீா்கேடு, நோயாளிகள் அவதி, சிகிச்சையில் தாமதம் என பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றனவாம்.

இந்த அவலநிலையைக் கண்டித்தும், பணிநீக்கம் செய்யப்பட்டோரை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்மலை ரயில்வே பணிமனை டிஆா்இயூ தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கோட்டத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் கரிகாலன், ஓய்வூதியா் சங்கத்தின் சாா்பில் வெங்கடேசன், பணிமனை சங்கத்தின் தலைவா் லெனின், கிளைச் செயலா் கவியரசன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இந்த ஆா்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினா் கலந்து கொண்டனா்

Tags

Next Story