பிடிஓ அலுவலகத்தில் கருப்புத் துணியை கட்டி போராட்டம்

பிடிஓ அலுவலகத்தில் கருப்புத் துணியை கட்டி போராட்டம்

 பிடிஓ அலுவலகத்தில் முறையாக கணக்கு வழக்கு அளிக்காததால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கருப்புத் துணியை கட்டி போராட்டம் செய்தனர்.

பிடிஓ அலுவலகத்தில் முறையாக கணக்கு வழக்கு அளிக்காததால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கருப்புத் துணியை கட்டி போராட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் லட்சுமி நாராயணபுரம் ஊராட்சியில் திமுகவை சேர்ந்த சந்திரபாபு தலைவராக உள்ளார்.மேலும், துணை தலைவராக கூட்டணி கட்சியான மதிமுகவை சேர்ந்த சத்யா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மேற்கண்ட ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதில், அனைத்து வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் பயனாளர்களை தேர்வு செய்து வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி பயனாளர்களை தேர்வு செய்து பரிந்துரைத்தாக கூறப்படுகிறது. இதனால், துணை தலைவர் தனக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்களுடன் பிடிஓ அலுவலகத்துக்கு சென்று, மேற்கண்ட திட்டத்துக்கு தலைவர் வழங்கிய பயனாளர்கள் பட்டியலை காட்டுமாறு முறையிட்டுள்ளார். ஆனால், பிடிஓ அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பட்டியல் தங்களுக்கு வழங்கக்கூடாது என தலைவர் கூறியதாக தெரிவித்துள்ளனர். இதனால், துணை தலைவர் மற்றும் 2 வார்டு உறுப்பினர்களுடன், பிடிஓ அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து கண்களில் கருப்புதுணை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, பிடிஓ அலுவலகத்தில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து சமாதான பேச்சில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பட்டியலை வழங்கினர். ஆனால், பட்டியல் ஒருதலைபட்சமாக உள்ளதாகவும். தங்களுக்கு இதில், விருப்பமில்லை என தெரிவித்து வெளியேறினர். இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story