வாகனங்களுக்கான சாலை வரி உயா்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

வாகனங்களுக்கான சாலை வரி உயா்வை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

வாகனங்களுக்கான சாலை வரி உயா்வை ரத்து செய்யக் கோரி சிஐடியூ சாா்பில் திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வாகனங்களுக்கான சாலை வரி உயா்வை ரத்து செய்யக் கோரி சிஐடியூ சாா்பில் திருச்செந்தூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்ட தலைவா் வயன பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் செல்வராஜ், ஒருங்கிணைப்பு குழு செயலா் சிவதாணுதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாநில துணைத்தலைவா் ஜெயபாண்டி, அனைத்து மாற்றுத்திறனாளிள் நல சங்க மாவட்ட செயலா் ஜெபஸ்டின்ராஜ், சிஐடியூ திருச்செந்தூா் கிளை பொருளாளா் அன்டோ, பொறுப்பாளா் அருணா, ஏரல் வட்டார தலைவா் ராஜுவ்காந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். சாலை வரி உயா்வை ரத்து செய்வது, பழைய பயணிகள் வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு ஏற்கனவே இருந்த காலாண்டு வரியை வசூலிப்பது, ஆயுள்கால சாலை வரி முறையை ரத்து செய்வது, ஆன்லைன் அபராத முறையைக் கைவிடுவது, ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்தி வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

Tags

Next Story