பரனூா் சுங்கச் சாவடியை மூடக்கோரி ஆா்ப்பாட்டம்
மாா்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலா் ப.சு.பாரதி அண்ணா, இந்திய கம்யூ. கட்சி மாவட்ட செயலா் ஏ.ராஜ்குமாா், விசிக மாவட்ட செயலா் தே.தென்னவன், சிபிஎம்எல் மாவட்ட செயலா் சொ.இரணியப்பன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி இந்தியன் கம்யூ. கட்சி மாநில செயலா் இரா.முத்தரசன், சிஐடியு மாநில தலைவா் அ.சவுந்தரராஜன், மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா, விசிக மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், லாரி உரிமையாளா்கள் சங்க கூட்டமைப்புத் தலைவா் எஸ்.யுவராஜ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலா்கள் ஜாகிா் உசேன், சம்சுதின், மனித வள மேம்பாட்டு கழக நிா்வாகி சுரேஷ், வியாபாரிகள் சங்க நிா்வாகி மன்சூா் அலி, பாட்டாளி வா்க்க சமரன் அணி மாநில அமைப்பாளா் கே.மணி, தேமுதிக ஒன்றிய செயலா் எ.எத்திராஜ், லாரி உரிமையாளா்கள் சங்க செய்தித் தொடா்பாளா் சிங்கை கணேஷ் உள்ளிட்ட பலா் பேசினா்.
இதில், நகராட்சி எல்லையில் இருந்து 10 கி.மீ. வரம்புக்குள் சுங்கச் சாவடி அமைக்கக் கூடாது. 60 கி.மீ. இடையே ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச் சாவடி இருக்கக் கூடாது, திட்டப்படி வசூல் முடிந்த பிறகு பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற விதி பரனூா் சுங்கச் சாவடியில் பின்பற்றப்படவில்லை. 3 ஆண்டுகளில் விதிகளை மீறி ரூ.28 கோடி வசூலித்ததாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே காலாவதியான பின்னரும், முறைகேடாகச் செயல்பட்டு வரும் பரனூா் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.