பூனாம்பாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்.
பூனாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கிப்பட்டி கட்டாள் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு இன்று சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கிப்பட்டி கட்டாள் பகுதி கிராம பொதுமக்களுக்கு வடக்கிப் பட்டியிலிருந்து கொள்ளிடம் பிரிவு வாய்க்காலில் குடிநீர் நீரேற்றுக் குழாய் மூலம் வரப்பெற்ற குடிநீரானது குடிநீர் தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு,எங்கள் பகுதி மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வந்தோம்.
அதன் பிறகு எங்கள் பகுதியில் குடிநீருக்காக ஆழ்துளைகுழாய் கிணறு போட்டு அதன் மூலம் தண்ணீர் குடிநீர் தேக்க தொட்டியில் ஏற்றி அனைவருக்கும் கிடைத்து வந்தது.தற்போது சுமார் 15 நாட்களுக்கு மேலாக எந்த குடிநீரும் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்று வந்தனர்.இது குறித்து பூனாம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவரை அணுகி பொதுமக்கள் கேட்டபோது குடிநீர் ஆழ்துளை குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லையென்று கூறிவருகிறார்.
ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 15 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் அவதியுற்று வந்தோம். எனவே எங்களுக்கு ஏற்கனவே பெற்றப்பட்ட கொள்ளிட பிரிவு வாய்க்கால் நீரேற்று குடிநீரை எங்கள் பகுதிக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென கூறி பூனாம்பாளையத்தில் உள்ள திருச்சி துறையூர்சாலையில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் மற்றும் பூனாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைய டுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது