நீட் தேர்வு குளறுபடிக்கு விசாரணை நடத்த கோரி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு குளறுபடிக்கு விசாரணை நடத்த கோரி ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு குளறுபடிக்கு விசாரணை நடத்த கோரி தஞ்சாவூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நீட் தேர்வு குளறுபடிக்கு விசாரணை நடத்த கோரி தஞ்சாவூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீட் தேர்வு குளறுபடிக்கு தேசிய தேர்வு முகமை ஆணையத்திடம் விசாரணை நடத்த கோரி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். இதில், ஏழை மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவுகளைப் பறிக்கிற, நடைமுறைக்கு ஒத்து வராத ஊழல் நிறைந்த முறைகேடான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய தேர்வு முகமை ஆணையத்திடம் நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய மாணவர் பெரு மன்ற மாவட்டச் செயலர் த. செல்வி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் சு. காரல் மார்க்ஸ் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலர் முத்து. உத்திராபதி, மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் க.இப்ராஹிம், மாநில பொதுச் செயலர் பா.தினேஷ், இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் ச.சுதந்திர பாரதி, துணைத் தலைவர் இரா. பிரபாகர், மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் பி. ஜெகதீஷ், உ.கவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கோ.சக்தி வேல், ஆர்.பி. முத்துக்குமரன், பி. குணசேகரன், பேராசிரியர் பாஸ்கர், மாணவர் பெருமன்ற மாநிலத் துணைச் செயலர் ஜெ.பி.வீரபாண்டியன் நிர்வாகிகள் வை. நிரூபன், பிரபு, ஆ. பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட

Tags

Next Story