ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

ராமநாதபுரம் அரண்மனை முன்பு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைப்பு செய்து அரண்மனை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ரத்து செய்துவிட்டு பழைய முறைப்படி தேர்தல் வாக்குச்சீட்டு மூலம் நடத்த வேண்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பதை தெளிவுபடுத்தும் விதமாக ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் அற்புதராஜ் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

மாநில நிர்வாகி விடுதலை சேகரன், கோவிந்தராஜ், நைனா அசாருதீன், முகவை மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய தேர்தல் ஆணையம் (EVM) மெஷினுடன் 100 சதவீதம் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தையும் இணைத்து தேர்தல் நடத்த வேண்டும்.

மேலும் மத்திய பாஜக அரசு அங்கீகரித்த நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை( EVM) நிறுத்திவிட்டு புதிய வேறு ஒரு நிறுவனம் மூலம் (EVM) மெஷினை தயார் செய்து பொதுமக்களுக்கு நம்பகத் தன்மை வாய்ந்த தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story