பாஜக சார்பில் வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாஜக சார்பில் வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
துணை ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற சபநாயகர் ஆகியோரை காங்கிரஸ், திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் அவமதிப்பு செய்ததை கண்டித்து பாஜக சார்பில் வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துணை ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற சபநாயகர் ஆகியோரை காங்கிரஸ், திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் அவமதிப்பு செய்ததை கண்டித்து பாஜக சார்பில் வேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று துணை ஜனாதிபதி, மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோரை அவமதித்த காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு,காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபநாயகருக்கு உரிய மரியாதை அளிக்காமல் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் பாராளுமன்றம் மரபுகளை மீறிய செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர்களை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags

Next Story