அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக அரசை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஓய்வு பெற்ற தொழிலாளர் குடும்பங்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடைபெறும் என அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் செபஸ்தியான் பேட்டி. கடந்த மாதம் 12ஆம்ச கோரிக்கையில் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

குறிப்பாக தமிழக முழுவதும் பேருந்துகள் ஓடவில்லை இதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு பேசிக் கள்ளலாம் என்று பேசியதை அடுத்து போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது ஆனால் இதுவரை எந்த தொழிற்சங்கத்திடம் அரசு பேசவில்லை இந்நிலையில் புதுக்கோட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கத்தினர் 12 அம்ச கோரிக்கை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள் குறிப்பாக ஓய்வு பெற்ற தொழிலாளர் குடும்பத்தினை வஞ்சிக்க கூடாது போக்குவரத்து துறையை சீரழிக்காதே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள டி ஏ வை உடனே வழங்கிட வேண்டும் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை இனியும் எழுத்தடிக்காதே பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் தொழிலாளர்களுக்கு தரமான உணவு வழங்கிட வேண்டும் புதிய ஓட்டுநர்கள் நடத்துனர்களை உடனே பணியமறுத்த வேண்டும் வாரிசுதாரர்களுக்கு தகுதிக்கு ஏற்ப உடனே வேலை வாங்கிட வேண்டும் போக்குவரத்து துறையை தனியார் வாக்குவதில் இருந்து காப்பாற்ற வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்கள் ஆக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் செபஸ்தியார் தலைமை வகித்தார் அண்ணா தொழிற்சங்க தலைவர் அழகன் பொருளாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வைத்தனர் போக்குவரத்து பிரிவு இணைச்செயலாளர் வீரகேசவன் சிறப்புரை ஆற்றினார் ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் மற்றும் அனைத்து கிளை பொறுப்பாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் பின்னர் இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் செபஸ்தியார் கூறுகையில் திமுக அரசு எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் இல்லை நாங்கள் பல கட்ட போராட்டம் செய்துள்ளோம் அதற்கு முடிவு தெரியவில்லை இந்நிலையில் எங்களை அழத்தின் பேசவில்லை எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கலந்து ஆலோசனை செய்யப்படும் என தெரிவித்தார் பேட்டி அண்ணா தொழிற்சங்க மன்ற செயலாளர் செபஸ்தியான்

Tags

Next Story