அடிப்படை வசதி செய்த தர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பல்வேறு கோரிக்களை முன் வைத்து முழக்கங்கள் எழுப்பினர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள பிஎஸ்கே நகர் பேருந்து நிறுத்தம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிங்கராஜை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை ஏற்றார். வழக்கறிஞர் அணி தங்க ரவி, தொழிற்சங்க செயலாளர் கஜேந்திரன், சத்திரப்பட்டி ஒன்றிய செயலாளர் கருப்பையா, மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், பெயிண்டர் சுப்ரமணியம், மாவட்ட தொண்டரணி கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். தெற்கு நகர செயலாளர் எபினேசர், வடக்கு நகர செயலாளர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் ராமராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன முழக்கமிட்டார். மாநில செயற்குழு உறுப்பினர் இசக்கி நாதன், மாவட்ட அமைப்பு செயலாளர் மாஸ்டர் மணி, மாவட்ட துணை செயலாளர் காளிதாசன் சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனை முதல் குப்பை மேடு வரை சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும், அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும், சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் மழை நேரத்தில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும், அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் குழாய் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
Next Story