உயர் அழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்ககோரி ஆர்பாட்டம்

உயர் அழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  கூடுதல் இழப்பீடு வழங்ககோரி ஆர்பாட்டம்

உயர் அழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்ககோரி ஆர்பாட்டம்

உயர் அழுத்த மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு கழகம் ஆகிய இரண்டு நிறுவனங்களால் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் நில மதிப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பி செல்லும் இடங்களுக்கு கிராமத்தில் அதிகபட்ச சந்தை மதிப்பீட்டை கணக்கில் கொண்டும், 2013 நில எடுப்பு சட்டத்தை அடிப்படையாகக்கொண்டும் இழப்பீடு தொகை வழங்கிட வேண்டும். இழப்பீடு தொகையோடு ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மார்க்சிட்டு கம்யுனிஸ்டு மாவட்ட செயலாளர் மேவை சண்முகராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story