தைல மரங்களை அகற்ற கோரி போராட்டம்

தைல மரங்களை அகற்ற கோரி போராட்டம்

புதுக்கோட்டையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தைல மரங்களை அகற்ற கோரி இந்திய விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.


புதுக்கோட்டையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் தைல மரங்களை அகற்ற கோரி இந்திய விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை, சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தைல மரங்களை அகற்றுவதற்காக சட்டப் போராட்டம் நடத்துவதுடன் மக்களையும் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார் இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஜி.எஸ். தனபதி. புதுக்கோட்டையில் தைலமரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்த மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியது: புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலம் காடுகளாகப் பராமரிக்கப்பட்டது. அவற்றுடன் 6 ஆயிரம் பாசனக் குளங்களும், 11 ஆயிரம் ஊருணிகளும் அப்போதைய மன்னர்களின் ஆட்சியில் பராமரிக்கப்பட்டன. 1974-ஆம் ஆண்டில் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் உருவாக்கப்பட்டு தைலமரங்கள் நடவு செய்யப்பட்டன. தைலமரக் காடுகளில் இருந்து மழைநீர் வெளியே வராததால் விவசாயம் அழிந்து போனது. உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தொடர் சட்டப் போராட்டங்களை நடத்துவதற்காக மூத்த வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன் தலைமையில் ஒரு குழுவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி போராட்டத்துக்கு திரட்ட கே.எம். சரீப் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாதம் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் புதுகை விவசாய சங்கங்களையும் இணைத்துக் கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தனபதி.முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்கு ஜி.எஸ். தனபதி முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்கு ஜி.எஸ். தனபதி தலைமை வகித்தார். மதுரை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் த. குருசாமி, வழக்குரைஞர்கள் மாரியப்பன், ஏ. சந்திரசேகரன், கே எம் சரீப், அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவர் மேகலா முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story