எலச்சிபாளையத்தில் பி.டி.ஓ அலுவலகம் முன்பு கொசுபிடிக்கும் போராட்டம்

எலச்சிபாளையத்தில் பி.டி.ஓ அலுவலகம் முன்பு  கொசுபிடிக்கும் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட சி.பி.ஐ.எம் கட்சியினர் 

நெடுஞ்சாலையில் குட்டை போல தேங்கி நிற்கும் நீரை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொசுவலை வைத்து கொசு பிடிக்கும் போராட்டம் நடந்தது.

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர், சாக்கடை கழிவுநீர் குட்டைப் போல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், எலச்சிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நூதனமான முறையில், கொசுவலை பிடித்துக் கொண்டு எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. இதுகுறித்து, கடந்த வாரத்தில் நடந்த கிளை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை சார்பில், திருச்செங்கோடு - ராசிபுரம் சாலையின் இருபுறமும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. அப்போது எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உள்ள சாக்கடை கால்வாய் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டதால், மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சாக்கடை கழிவுநீர் வெளியேறாமல் மளிகைகடை, ஜெராக்ஸ்கடை, அரசுஅலுவலகம் என அனைத்து பகுதி மக்களையும் பாதிக்கின்ற வகையில் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து, பலமுறை அரசு அதிகாரிகளுக்கு முறையிட்டு எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொசு பிடிக்கும் போராட்டம் நூதன முறையில் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ். வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி சுரேஷ், ஒன்றிய குழுஉறுப்பினர்கள் பி. மாரிமுத்து, ஈஸ்வரன், கிட்டுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story