முதியவர் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவ கல்லூரியில் போராட்டம் 

முதியவர் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவ கல்லூரியில் போராட்டம் 
உடலை வாங்க மறுத்து போராட்டம்
நாகர்கோவிலில் முதியவர் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவ கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழவிளை பகுதியை சேர்ந்தவர் வைகுண்டமணி (61). நேற்று தம்மத்து கோணம் பகுதியில் உள்ள பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான தென்னை தோப்பில் தலை மற்றும் முகம் பகுதிகளில் பலத்த ரத்த காயத்துடன் வைகுண்டமணி இறந்து கிடந்தார்.

இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வைகுண்ட மணி அடிக்கடி பாஸ்கரின் தோட்டத்தில் சென்று தென்னை ஓலைகளை பொறுக்குவதாகவும், அதனை பாஸ்கர் கண்டித்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வைகுண்டமணி பாஸ்கரின் தோட்டத்தில் தென்னை ஓலை எடுக்க வந்திருக்கலாம் என்றும், இதில் தகராறு ஏற்பட்டு அடித்ததில் வைகுண்டமணி இறந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று பிரேத பரிசோதனைக்கு பின் வைகுண்டமணி உடலை வாங்க மறுத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடத்தினர். கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளியை மோப்ப நாய்கள் அடையாளம் காட்டியும் ,

24 மணி நேரமாகியும் போலீசார் இன்னும் கைது செய்ய முன்வராததை கண்டித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story