டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் கிருஷ்ணகிரியில் அரசு ஆடவர் கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசினைக் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாணவர்கள்.
விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரி ஆடவர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்
விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் செயலைக் கண்டித்தும், அப்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்க்கு ஆதரவாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேலும் இந்த கண்டன ஆர்பாடத்தில் விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வழியுறுத்தி ஆர்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.