தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.

கேங்மேன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, இடம் மாறுதல், கள உதவியாளராக பணிமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் அகஸ்டின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம் ,வட்ட பொருளாளர் கண்ணன் மாநில செயற்குழு இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் 01.12.2019 முதல் வழங்கிய ஊதிய உயர்வை கேங்மேன் பணியாளர்களுக்கும் வழங்கிட வேண்டும் கட்டுமானப் பணிகள், புதிய மின் இணைப்பு வழங்குதல் மின்தடை மற்றும் அலுவலகப் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கள உதவியாளராக மாற்றம் செய்திட வேண்டும், அனைத்து உள்முக தேர்வுகளுக்கும் வாய்ப்பு வழங்கிட வேண்டும் விருப்ப மாறுதல் அளித்த விண்ணப்பங்களின் படி கால தாமதப்படுத்தாமல் ஊர் மாற்றம் உத்தரவை உடனடியாக வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்நிர்வாகிகள் நாராயணன், காசிநாதன், செந்தமிழ்செல்வன், ஆறுமுகம், அண்ணாதுரை செல்வகுமார், மணி, செந்தமிழ் செல்வன், கோட்ட செயலாளர் நல்லுசாமி, உள்ளிட்ட தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் பல கலந்து கொண்டனர்.

Tags

Next Story