புதுக்கோட்டையில் ஆர்பாட்டம்

புதுக்கோட்டையில் ஆர்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் ஊதியத்தில் அரசு தாமாகவே மாதந்தோறும் வருமான வரி பிடித்தம் செய்யும் முறையை கைவிட வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார் மாநில செயற்குழு உறுப்பினர் பேச்சியம்மாள் மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைத்தலைவர் ராஜா மாவட்ட செயலாளர் ஜீவன்ராஜ் ஆகியோர் கோரிக்கை விளக்கினார்கள். பின்னர் மாவட்டத் தலைவர் சோமசுந்தரம் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்,

தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு தமிழ்நாடு அரசு அமல்படுத்தி வரும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் (NHIS) செயல்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்: 160.நாள்: 29.06.2021ன் படி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பொறுப்பை மேற்கொள்ள தமிழ்நாடு அரசிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள United India Insurance நிறுவனமும், அந்நிறுவனத்திடம் மூன்றாம் நபர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள MD Indla மற்றும் Medi Assist ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காமல் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிகிச்சைக்கான கட்டணத்தில் 20% முதல் 40% வரை மட்டுமே அனுமதித்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன.

இம்முறைகேடு மீது தமிழ்நாடு அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்குவதை உறுதிப்படுத்துவதோடு, காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் IFHRMS முறையில் தாமாகவே மாதந்தோறும் வருமான வரிப் பிடித்தம் செய்யும் முறையைக் கைவிட்டு, பழைய நடைமுறைப்படி ஆசிரியர்களின் விருப்பப்படி முன்பு போல் வருமான வரி செலுத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவும் விரைவில் தொடர் போராட்ட நடவடிக்கையாக சென்னையில் இன்வெர்ட்டர் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு மாநில அளவிலான மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

Tags

Next Story