புள்ளானேரியில் சுடுகாடு கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்

புள்ளானேரியில்  சுடுகாடு கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம்


நாட்றம்பள்ளி அடுத்த புள்ளானேரி இந்திரா நகர் பகுதியில் சுடுகாடு கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.


நாட்றம்பள்ளி அடுத்த புள்ளானேரி இந்திரா நகர் பகுதியில் சுடுகாடு கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புள்ளானேரி இந்திரா நகர் பகுதியில் சுடுகாடு கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டம் - போலீசார் சமரசம் திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, புள்ளானேரி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென நாட்றம்பள்ளியிலிருந்து புள்ளானேரி வழியாக திருப்பத்தூர் வரை செல்லும் நகர பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து சுடுகாட்டு பிரச்சினையை தீர்ப்பதாக கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். ஏற்கெனவே சுடுகாடாக பயன்படுத்தி வந்த நிலம் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான நிலம் சர்வே எண் 183/6A என்றும் கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்தார். ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பூஜை செய்துக்கொள்ளவும், நாங்கள் தடை ஏதும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தனர். தனக்கு உள்ள 1.5 ஏக்கர் நிலம் உள்ளது என்றும் எனக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

அவர்களுக்கு வீடு கட்ட மட்டுமே இடம் உள்ளது. அதனால் சுடுகாட்டிற்கு நிலம் தர முடியாது என்றும் எனது நிலத்திற்கு அருகில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதை சுடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story