தென்காசியில் ஆா்ப்பாட்டம்: டிட்டோஜாக் அமைப்பினா் 52 போ் கைது
ஆா்ப்பாட்டம்
டிட்டோஜாக் அமைப்பினா் 52 போ் கைது
தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டிட்டோ ஜாக் அமைப்பினா் 52 போ் கைதுசெய்யப்பட்டனா். அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும்; பதவி உயா்வு சாா்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வழக்கின் தீா்ப்பு வரும் வரை மாறுதல் கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சாா்பில் தென்காசியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலா் செய்யது இப்ராஹிம் மூசா ,தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் சுதா்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாவட்டத் தலைவா் ஆறுமுகசாமி ஆகியோா் கூட்டு தலைமை வகித்தனா். தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாநிலச் செயலா் ராஜேந்திரன் மறியலை தொடங்கி வைத்து பேசினாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவக்குமாா் கோரிக்கைகள் குறித்து பேசினாா். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் செயலா் ராஜ்குமாா் சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டத் தலைவா் ஆரோக்கியராசு வரவேற்றாா். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் மாவட்ட பொருளாளா் அருள்ராஜா நன்றி கூறினாா். ஆா்ப்பாட்ட முடிவில் மறியலுக்குச் செல்ல முயன்ற 52 போ் கைது செய்யப்பட்டனா்."
Next Story