மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய  அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

திருப்பூர் குமரன் சிலை முன்பு மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டாட்சி கோட்பாடுகளை சிதைத்து, மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பூர் குமரம் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய பாஜக அரசு தலையிடுவதை எதிர்த்தும், கூட்டாட்சி கோட்பாடுகளை சிதைத்து மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், ஆளுநர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் அத்துமீறல், அடாவடித்தனங்களை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாநில உரிமைகளின் நலன் காக்க மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் வியாழனன்று திருப்பூர் குமரன் சிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.எல்.ஏ க.செல்வராஜ், காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துகண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம்.ரவி, மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.நாகராஜ், விசிக சார்பில் துரை வளவன், கொமதேக சார்பில் சுரேஷ்குமார், முஸ்லிம் லீக் மாநகர மாவட்டத் தலைவர் என்.சையத் முஸ்தபா, மநேமக மாவட்டத் தலைவர் ஏ.நசீர்தீன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் யாழ் ஆறுச்சாமி, திவிக மாவட்டச் செயலாளர் முகில் ராசு, தபெக மாவட்டத் தலைவர் சண்.முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story