எடப்பாடி தலைமையில் போராட்டம் - ஆர் பி உதயகுமார் பேட்டி

எடப்பாடி தலைமையில் போராட்டம் - ஆர் பி உதயகுமார் பேட்டி

முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டினால் எடப்பாடி தலைமையில் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என ஆர் பி உதயகுமார் பேட்டியளித்தார்.


முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டினால் எடப்பாடி தலைமையில் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என ஆர் பி உதயகுமார் பேட்டியளித்தார்.

முல்லைப் பெரியாரை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவோம் என்று கேரளா அரசு கூறிவரும் நிலையில் தமிழக அரசு புலி போல் பாய்ந்து செயல்படாமல் பூனை போல் பதுங்குகிறது தமிழக மக்களின் ஜீவாதார உரிமையை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேனி அல்லது மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் அருகே நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லூர் கிராமத்தில் கள்ளிக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபுசங்கர் ஏற்பாட்டில் அசைவ அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார் முன்னதாக கள்ளிக்குடி தொடர்ந்து வில்லூர் கிராமத்தில் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அன்னதான விழாவில் பங்கேற்று பொதுமக்களுக்கு அசைவ அன்னதானத்தை எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் மகேந்திரன் தமிழரசன் மாணிக்கம் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் வெற்றிவேல் மாவட்ட பொருளாளர் திருப்பதி ஒன்றிய செயலாளர் கண்ணன் அன்பழகன் ராமையா ராமசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் பொதுமக்களிடையே உரையாற்றிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் புரட்சித்தமிழர் எடப்பாடி யாருக்கு எந்த சுயநலமும் கிடையாது. மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற பொதுநலத்தோடு சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்றார்.

தொடர்ந்து பேசிய ஆர் பி உதயக்குமார் முல்லைப் பெரியாறு நமக்கு ஜீவாதார உரிமை தேனி, திண்டுக்கல்,மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட ஐந்து மாவட்டங்களுக்கு முல்லைப் பெரியாறு தான் ஜீவாதார உரிமை அந்த உரிமையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான் 142 அடியை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று மிகப்பெரிய சட்ட போராட்டம் நடத்தி 2016ல் உரிமையை மீட்டுக் கொடுத்தார்கள் அதற்காக உரிமை மீட்பு மாநாடு கூட மதுரையில் நடைபெற்றது.இன்றைக்கு கேரளா அரசு தொடர்ந்து நாங்கள் புதிய அணை கட்டுவோம் பெரியாறு அணையை இடிப்போம் என இரண்டு ஆண்டுகளாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி அதனை கண்டித்து இன்றைக்கு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் ஆளுகிற கட்சியில் இருக்கிற முதல்வர் இப்போதுதான் தூங்கி எழுந்து சிலந்தி அணையை கட்டுவதை நிறுத்த வேண்டும் நிறுத்த வேண்டும் என்று நமது உரிமையை பறிபோகக்கூடிய சூழ்நிலையை கூட புலியாக பாய வேண்டிய நேரத்தில் பூனையாக பதுங்கிக் கொண்டு கூட்டணி தர்மத்திற்காகவும் தன்னுடைய குடும்பத் தொழிலுக்காகவும் தமிழகத்தின் ஜீவதாரத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பது நியாயம் தானா என்று கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார் அணை பாதுகாப்பாகவும் உறுதியாகவும் வல்லுநர்குழு தெரிவித்தும் கேரள அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. தமிழக முதல்வர் இந்த விசயத்தில் மென்மை போக்கை கடைபிடிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவையும் மீறி கேரள அரசு அணை கட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியதாகும் . அணை பாதுகாப்பாக இருந்தாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்ட முயற்சிக்கிறது. கேரள அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அனண கட்ட முடியாது என்றாலும் கேரள அரசு தொடர்ந்து அணை கட்டப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவினை சமூக வலைதளங்களில் பரப்பி முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயற்சிக்கிறது.

இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு வரக்கூடிய பருவமழை காலங்களில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இரண்டு முறை 142 அடி தண்ணீர் தேய்க்கினோம் அதேபோல் அரசு 152 அடி வரை தண்ணீரை கேட்க நடவடிக்கை எடுத்து ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமையை காக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விசயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டினால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஐந்து மாவட்ட விவசாயிகளை திரட்டி தேனி அல்லது மதுரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Tags

Next Story