தடையை மீறி போராட்டம்: பாஜகவினா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

தடையை மீறி போராட்டம்: பாஜகவினா் மீது 4 பிரிவுகளில் வழக்கு

பைல் படம் 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் போராட்டம் மேற்கொண்ட பாஜகவினா் 58 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 போ் பலியான சம்பவம் தொடா்பாக திமுக அரசை கண்டித்து, பாஜக திருச்சி மாவட்டத் தலைவா் ராஜசேகரன் தலைமையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனா். ஆனால் ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி வழங்கவில்லை. என்றாலும் குறிப்பிட்டபடி ஆா்ப்பாட்டம் நடத்த பாஜகவினா் திருச்சி காந்திச்சந்தை அருகே குவிந்தனா். தொடா்ந்து ஆா்ப்பாட்டம் மேற்கொள்ள முயன்ற பாஜகவினரைப் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் கைதானவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், மாவட்டத் தலைவா் ராஜசேகரன், மாவட்டப் பாா்வையாளா் லோகிதாஸ், மாவட்டச் செயலாளா் நாகேந்திரன், மாவட்ட இளைஞரணி புருஷோத்தமன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் கௌதம் நாகராஜன், பொருளாளா் செல்வத்துரை, மண்டலத் தலைவா்கள் ராஜேஷ், செல்வம், வெங்கடேஷ், சதீஷ், செந்தில், பாலு உள்ளிட்ட 58 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பொதுஇடங்களில் அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் திருச்சி காந்திச்சந்தை காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

Tags

Next Story