கண்டன ஆர்ப்பாட்டம்!
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு பா.ஜ., சார்பில் கயத்தாறில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வெள்ள சேதம் அடைந்த பயிர்களுக்கு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 வரை வழங்க வலியுறுத்தி கயத்தாரில் மதுரை மெயின் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் கிழக்கு ஒன்றிய தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரையாற்ற சிறப்பு அழைப்பாளர்களாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்குமார், ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் கணேஷ், மாவட்ட ஆன்மீக பிரிவு தலைவர் ராம்கி, மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா, ஆகியோர் முன்னிலை கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலப் பிரிவு செயலாளர் மாரியப்பன், அரசு தொடர்பு துறை தலைவர் தங்கதுரை, கயத்தார் மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் செயலாளர் ராதாகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய பார்வையாளர் ஆதிநாராயணன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மகளிர் அணி ஒன்றிய தலைவர் சாந்தி, கயத்தாறு கிழக்கு ஒன்றிய துணைத்தலைவி இசக்கியம்மாள், கயத்தாறு கிழக்கு ஓன்றிய பொதுச்செயலாளர் மாடசாமி, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ராமர்பாண்டியன், உட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.