கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

விருதுநகரில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் -நிறை வேற்றவில்லையெனில் வருகின்ற 25ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் சார்பாக ( டாப்பியா ) மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நியாய விலை கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை மாலை 6 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று ஈ .கே. ஒய்.சியில் விரல் ரேகை பதிவு செய்ய நிர்பந்திக்கப்படுவதை உடனடியாக கைவிட வேண்டும்.சங்கங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் எம் எஸ் சி/ ஏ.ஐ.எப் திட்டத்தை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும்.

புது பதவி தரத்தின் கீழ் செயலாளர்கள் இடமாற்றத்தில் உள்ள சிரமங்கள் மற்றும். பிப்ரவரி 2021க்கு பின்னர் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அனுமதிக்கப்படாதது. நகை ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட இழப்பை நட்ட கணக்குக்கு எடுத்துச் செல்லுதல். அந்தந்த மாவட்டத்தில் உள்ள நடைமுறைகளை பின்பற்றி வழங்கப்பட்ட பயிர் கடன்களை விதிமுறை மீறல் என்று கூறி பணியாளர்களின் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தி வைத்துள்ளதை விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பேட்டி:- மாவட்டச் செயலாளர் நடராஜன் (டாக்பியா)

Tags

Next Story