திருவண்ணாமலையில் விவசாயிகள் சங்கம் சார்பில் நூதன போராட்டம்
கோப்பு படம்
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது.
கையில் கோரிக்கை மனுவை ஏந்திய படியும், நாமம் வரைந்த சாந்து சட்டியை ஏந்தியபடியும் ஊர்வலமாக வந்து ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த கோரிக்கை மனு பெட்டியில் மனுவை செலுத்தினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story