விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் முத்து ராமலிங்கம் நகரில் சாலை அமைக்க கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உடலில் கட்டுப் போட்டு நூதன போராட்டம் நடைபெற்றது

விருதுநகர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சி முத்துராமலிங்கம் நகரில் புதிய தார் சாலை அமைக்க கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டப்பட்தாகவும் ஆனால் சாலை அமைக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

எனவே உடனடியாக தார் சாலை அமைக்க கோரியும் டென்டர் எடுத்து உரிய காலத்தில் பணியை முடிக்காத ஒப்பந்த காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் உடலில் கட்டுப் போட்டு நூதன போராட்டம் நடைபெற்றது.

தியாகி சந்துரு நினைவகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு நகராட்சி கவுன்சிலர் கே.ஜெயக்குமார் தலைமையேற்றார். துவக்கி வைத்து நகர் செயலாளர் எல்.முருகன் பேசினார். மூத்த தலைவர் எஸ்.பால சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில் நகர் குழு உறுப்பினர் பாலமுருகன். செல்வம். வாலிபர் சங்க நகர் செயலாளர் தீபக்குமார் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story