திருவட்டாரில்  ஊராட்சி ஒன்றிய  கூட்டமைப்பினர் சார்பில் ஆர்பாட்டம் 

திருவட்டாரில்  ஊராட்சி ஒன்றிய  கூட்டமைப்பினர் சார்பில் ஆர்பாட்டம் 
திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை எதிர்த்து ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் 25 ஊராட்சிகளை பேரூராட்களோடு இணைக்கவும் தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்திடம் கருத்துரு கேட்டுள்ளது . இதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வலியுத்தி திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு இன்று திருவட்டார் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.

கூட்டமைப்பின் தலைவரும், காட்டாத்துறை ஊராட்சித்தலைவருமான இசையாஸ் தலைமை தாங்கினார். பால்சன்(குமரன்குடி), சலேட் கிறிஸ்டோபர்(அருவிக்கரை), ஹெப்சிபா ரூஸ்(ஏற்றக்கோடு), ரெஜினி விஜிலாபாய்(கண்ணனூர்) அனுஷன் அய்யப்பன்(செறுகோல்), தேவதாஸ்(பேச்சிப்பாறை), செல்லப்பன்(அயக்கோடு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பொதுமக்கள், கிராம ஊரக வேலைதிட்ட பணியாளர்கள் என ஏராளமானோர் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் ஆர்பாட்டம் நடந்தது. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சசியிடம் ஊராட்சிகளை இணைக்கும் ஆணையை ரத்து செய்யக்கேட்டு தீர்மானம் நிறைவேற்றிய நகலை அளித்தனர்.

Tags

Next Story