விருதுநகரில் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கம் சார்பில் போராட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புவிருதுநகரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமையில்,
மாநில தலைவர் குணசேகரன் முன்னிலையில் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 90% ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை எண். 243 ஐ உடனடியாக ரத்து செய்து ஒன்றிய முன்னுரிமைப்படி பதவி உயர்வு வழங்கிட வேண்டும்,
கடந்த 12.10.2023-ல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வி இயக்குநர் முன்னிலையில் பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளுக்கு தமிழக அரசு உடனடியாக ஆனைகள் வழங்கிடு.
உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் முழுவதிலுமிருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பின்பு இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.