நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் குமார் பாண்டி தலைமையில், பொதுப்பணி கட்டிடங்கள் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களின் உறவினர் என்று கூறிக்கொண்டு நிர்வாகப் பணிகளில் தொழிற்சங்க ரீதியிலான கோரிக்கைகள் மீது பாராமுகம் காட்டும் தலைமைப் பொறியாளர் அவர்களின் மெத்தனப் போக்கை கண்டித்தும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி உடனடியாக தமிழக அரசு ஆணை வழங்க வேண்டும். சா

லைப்பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படியில் பணிநியமன ஆணை வழங்க வேண்டும்.சாலைப்பணியாளர் பணிக்கு மட்டுமே தகுதியானவர்களுக்கு சாலைப்பணியாளராக பணி நியமன ஆணையை கோட்டப்பொறியாளர்களே வழங்கிட அனுமதிக்க வேண்டும்,சாலைப் பணியாளர்களுக்கான முதுநிலைப்பட்டியல் 2016 ன் படி முறைப்படுத்த மறுத்து விதிகளுக்குப் புறம்பாக முதுநிலைப்பட்டியல் வெளியிட்டுள்ள கோட்டப் பொறியாளர்களின் விதி மீறிய செயலுக்கு துணை போகும் தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் மீது அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,

தொழிற்சங்க உரிமையினை கேலிக்குள்ளாக்கும் ஜனநாயக ரீதியான தொழிற்சங்க இயக்கங்களை அச்சுறுத்தி அத்துமீறும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வரும் தலைமைப்பொறியாளர் சந்திரசேகரன் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story