சாலை பணியாளர் சங்கம் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர் சங்கம் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர் சங்கம் சார்பில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் தலைமை பொறியாளரின்( சந்திரசேகரன் )ஊழியர் விரோதப் போக்கை கண்டித்தும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தல், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரின் உறவினர் எனக் கூறிக்கொண்டு நிர்வாகப் பணிகளில் தொழிற்சங்க ரீதியிலான கோரிக்கையில் மீது பாராமுகம் காட்டும் தலைமை பொறியாளர் மெத்தன போக்கை கண்டித்தும், சாலை பணியாளர்களின் இறந்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், சாலை பணியாளர் பணிக்கு மற்றும் தகுதியானவர்களுக்கு சாலை பணியாளராக பணி நியமனம் செய்து கோட்ட பொறியாளர்கள் உத்தரவு வழங்க வேண்டும் .
சாலை பணியாளர்களுக்கான முதல்நிலை பட்டியல் படி முறைப்படுத்த மறுத்து விதிகளுக்கு புறம்பாக முதல்நிலை பட்டியல் வெளியிட்டுள்ள கோட்ட பொறியாளர்களின் விதி மீறிய செயலுக்கு துணை போகும் தலைமை பொறியாளரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியர் கூறிய ஊதிய மாற்றம் 5500 இருந்து 20200 தர ஊதியம் ரூபாய் 1900 வழங்க வேண்டும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்கள் சாலை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு முத்தரப்பு பேச்சு வார்த்தை கூட்டி தீர்வு காண வேண்டும்.
தொழிற்சங்க உரிமையினை கேலிக்கூத்தாகும் விதமாக ஜனநாயக ரீதியான தொழிற்சங்க இயக்கங்களை அச்சுறுத்தி அத்துமீறும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வரும் தலைமை பொறியாளர் அவர்களை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டனம் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர் ரா. சண்முகம் கோட்டை துணை தலைவர்கள் தொல்காப்பியன், ராமு. அறிவழகன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க துணை தலைவர் ஸ்ரீதர், கோட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட துணை தலைவர் பாஸ்கர். மாவட்ட செயலாளர் பிரபு, மாநில பொதுச் செயலாளர் பாரி, மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.