எஸ்டிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அயோத்தியில் பாபர் மசூதி கடந்த 1991ம் ஆண்டு டிசம்பர் 6ம்தேதி சங்க பரிவார் அமைப்புகளால் இடிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டு தோறும் இஸ்லாமிய அமைப்புகள் டிசம்பர் 6ம்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் 6ம்தேதியான நேற்று திண்டுக்கல் பேகம்பூரில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்புக் குழு தலைவர் அபுதாஹீர் தலைமையில் நடைபெற்றது.
Next Story
