தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்பாட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பாக ஒன்றியத்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல் மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணிவரையரையுடன் கூடிய பணிநிரந்தர ஆணையினை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும், கடந்த 1.6.2009 முதல் நாங்கள் பெற்று வந்த சிறப்பு காலமுறை ஊதியத்தினை கணக்கிட்டு வழங்க வேண்டும், ஊராட்சி ஒன்றியத்திலும், ஊராட்சியிலும் பிரித்து வழங்கும் ஊதியத்தினை ஒன்றியத்திலேயே வழங்க வேண்டும், பணி ஓய்வு மற்றும் இறந்த பணியாளர்களுக்கு பணப்பலனும் வாரிசுகளுக்கு வேலையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story