கீரனூர் அருகே சட்டவிரோத கல்குவாரியை மூடக்கோரி போராட்டம்!

கீரனூர் அருகே சட்டவிரோத கல்குவாரியை மூடக்கோரி போராட்டம்!

கீரனூர் அருகே அனுமதியின்றி செயல்படும் கிரஷர் குவாரியை மூடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கீரனூர் அருகே அனுமதியின்றி செயல்படும் கிரஷர் குவாரியை மூடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரனூர் அருகே அனுமதியின்றி செயல்படும் கிரஷர் குவாரியை மூடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வத்தனாகுறிச்சி ஊராட்சியில் வெவ்வயல்பட்டி மற்றும் வத்தனாகுறிச்சி ஆதிதிராவிடர் குடியிருப்பு அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் கிரஷர் குவாரி செயல்பட்டு வருகிறது. இக்குவாரி அரசு விதிகளை மீறி செயல்படுவதாகவும் இந்தக் குவாரியில் வைக்கப்படும் வெடியால் அதிர்வு ஏற்பட்டு குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுவதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பகலிலேய குவாரி செயல்படுவதாக கிடைத்த தவலை அடுத்து, குவாரிக்குள் வாகனத்தை செல்லவிடாமல் மறித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப் போராட்டத்துக்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்டச் செயலர் ஏ. ஸ்ரீதர், ஒன்றியச் செயலர் எஸ். கலைச்செல்வன் உள்ளிட்டடோர் பங்கேற்றனர். அப்போது இங்கு வந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிச் செயற்பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். குவாரி செயல்பட எந்த அனுமதியும் வழங்கவில்லை, குவாரி செயல்படுவது தடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை ஒத்திவைத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story