திருச்சியில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருச்சியில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க வலியுறுத்தி அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷித் (ஏபிவிபி) அமைப்பினா் திருச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க வலியுறுத்தி அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷித் (ஏபிவிபி) அமைப்பினா் திருச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில இணைச் செயலா் சந்தோஷ்குமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பூக்கோடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயின்ற மருத்துவ மாணவா் ராகிங்கால் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும். தமிழகத்தில் அண்மைக் காலமாக பரவி வரும் போதைப்பொருள்கள் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் மகேஷ், திருச்சி மாநகரச் செயலா் ஸ்ரீராம், மாநகர இணைச் செயலா் பபிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags

Read MoreRead Less
Next Story