மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை காந்தி சிலை அருகேயும், பொதுமக்களின் பேருந்து நிறுத்தத்தின் அருகேயும் , தனியார் மதுபான கூடம் நடைபெற்று வருகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூராகவும், பொது மக்களுக்கு தொந்தரவாகவும், செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூட்டத்தை அகற்றக்கூறி தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனியார் மதுபான கூட்டத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட பெரியகுளம் தேனி சாலையில் உள்ள தண்டுபாளத்தில் இருந்து பேரணியாக வந்தபோது தென்கரை காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்தனர். மேலும் காவல்துறையினரின் தடுப்பையும் மீறியும் தனியார் மதுபான கூட்டத்திற்கு பூட்டு போட முற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மேலும் இப்போ ரகத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.