மங்காட்டில் ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

மங்காட்டில் ஆற்றில் உப்புநீர் புகுவதை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஆற்றில் உப்பு நீர் புகுவதை தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மங்காடு ஆற்றுப்பாலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..


ஆற்றில் உப்பு நீர் புகுவதை தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மங்காடு ஆற்றுப்பாலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கடை பகுதி தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது பரக்காணி - கணியன்குடி பகுதியில் உள்ள தடுப்பனையின் பக்கவாட்டுக் கரை பகுதிகளில் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்காத காரணத்தால், அந்த பகுதியில் ஆறு திசை மாறி கரை உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆற்று நீரும், கடல் நீரும் சேர்ந்து காணப்பட்டது.தற்போது ஆற்றில் தண்ணீர் வரைந்து குறைவாக உள்ளதால் உப்பு நீர் தாமிரபரணி ஆற்றில் புகுந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் ஆறு உப்பாக மாறி உள்ளது.

இதனால் வரும் நாட்களில் மேலும் உப்பு நீர் ஆற்றில் புகுந்து குழித்துறை செக் டேம் வரை உப்பாக மாற வாய்ப்பு உள்ளது.எனவே அரசு போர்க்கால அடிப்படையில் உப்பு நீர் ஆற்றில் புகாமல் தடுக்க வேண்டும் என்பது உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மங்காடு ஆற்றுப்பாலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு மெது கும்மல் வட்டாரக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.

Tags

Next Story