குப்பை கிடங்கை அகற்ற கோரி முற்றுகை போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 14 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை ஊரப்பாக்கம் அருகே காரனை புதுச்சேரி தொகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு உள்ள குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தாமல் தீ வைத்து எரித்து வருவதால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனர் மேலும் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள குப்பை கிடங்கால் கொசுத்தொல்லை அதிகமாகி பல்வேறு நோய்கள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்..
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் குப்பை கிடங்கை அகற்றக் கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் பின்பு காட்டாங்குளத்தூர் பிடிஓ சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்பு மக்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கலைந்து சென்றனர்.