குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட, அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சிக்கு சொந்த மான கிணற்றில் மோட்டார் பழுதடைந்ததால் கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்க ளுக்கு குடிநீர் வழங்கபடவில்லை இதனால் அந்தப்பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் அம்மா பாளையம் வன்னிமலை மேல் பகுதியில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

வன்னிமலை கீழ் பகுதிக்கு டிராக்டர் மூலம் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் டிராக்டர் ஓட்டுநர் தண்ணீர் எடுத்து வராததால். வன்னிமலை கீழ்பகுதி பொதுமக்கள் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்தும், தங்களுக்குதான் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்றும் காலிக்குடங்களுடன் பெரம்பலூர்- துறையூர் மாநில நெடுஞ்சா லையில் அம்மாபாளையம் கால்நடை மருந்தகம் அருகே , திடீர் என சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அம்மாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைப்பிள்ளை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது டிராக்டர் ஓட்டுநர் தெரியாமல் டிராக்டரை வன்னிமலை மேல் பகுதியில் நிறுத்திவிட்டார். உங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய போகிறோம். மோட்டார் பழுதும் விரைவில் சரி செய்யப்படும் என்று கூறி யதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போக்குவரத்து சரி செய்யப்பட்டு. பின்னர் வன்னிமலை கீழ் பகுதி பொது மக்களுக்கு டிராக்டர் மூலம் குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டது.

Tags

Next Story