சிறுவர் கிளப்புகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கள்

X
விளையாட்டு பொருட்கள் வழங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 12 சிறுவர் அரங்கங்களுக்கு (Police Boys Club) தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் புத்தகங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சிறுவர் விளையாட்டுக்கிளப்புகளுக்கு, விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 12 சிறுவர் அரங்கங்களுக்கு (Police Boys Club) தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் புத்தகங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: சிறுவர்கள் விளையாட்டில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். மாலை 5 மணி முதல் 6 மணி வரை எந்த சிறுவர்கள் விளையாட்டையும் விளையாட்டு மைதானத்தையும் நேசிக்கிறார்களோ, அவர்களுக்கு வேறு சமூக விரோத செயல்கள் ஈடுபட மனம் வராது. இளைஞர்களை நல்வழிப்படுத்துவது விளையாட்டாகவே உள்ளது என்று கூறினார்.
Next Story
