வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் முகாம்

வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் முகாம்

 சேலம், நாமக்கல் உள்பட 5 மாவட்டங்களில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது.

சேலம், நாமக்கல் உள்பட 5 மாவட்டங்களில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் முகாம் வரும் 27ம் தேதி நடக்கிறது.

சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 'நிதி ஆப்கே நிகட்' 2.0 என்ற பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் ஒன்றாக இணைந்து மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்து மக்கள் குறை தீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

அதன்படி, சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், ஈரோட்டில் அரசலூரில் உள்ள நவரசம் கலை கல்லூரி வளாகத்திலும், தர்மபுரியில் எருமியம்பட்டியில் உள்ள ஈ.ஆர்.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், நாமக்கல்லில் மோகனூரில் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நாமக்கல் கிளையிலும், கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரையில் உள்ள மாவட்ட கோ-ஆப் நூற்பாலையிலும் நடைபெறுகிறது. இந்த முகாமில் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் வரம்பிற்குட்பட்ட பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story